கடனாக பெற்ற 1500 ரூபாயை திரும்ப தரவில்லை என்பதற்காக இளைஞரை, கயிற்றில் கட்டி இருசக்கர வாகனத்தில் இழுத்து சென்ற சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒடிசாவில் கைகளை கயிறால் கட்டியபடி இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் இழுத்து செல்லப்பட்டார். அதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி விசாரித்ததில் ஆயிரத்து 500 ரூபாய் கடனை திரும்ப செலுத்தத்தாதால், அவரை கயிறு கட்டி இழுத்து சென்றது தெரிய வந்தது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த போலீசார், பாதிக்கப்பட்ட நபரை விடுவித்தனர்