தற்போதைய செய்திகள்

சாதியை சொல்லி தீட்சிதர்கள் திட்டிய விவகாரம்.."கையெழுத்து போடும்படி போலீஸ் மிரட்டுறாங்க"-பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள், பட்டியலின பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கை ரத்து செய்ய கையெழுத்து போடும்படி போலீசார் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலா என்பவர், நடராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றார்.

அங்கு தன்னை சாதி பெயரை சொல்லி தரிசனம் செய்ய அனுமதி மறுத்தாக, தீட்சிதர்கள் மீது ஜெயசீலா புகார் அளித்தார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று வழக்கை ரத்து செய்வதற்கு கையெழுத்து போடும்படி மிரட்டுவதாக ஜெயசீலா குற்றச்சாட்டியுள்ளார்.

காவல் ஆய்வாளர் உட்பட 8 போலீசார், வீட்டுக்கு வந்து மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்