தற்போதைய செய்திகள்

"அரசுக்கு உண்டியல் பணத்தை தர முடியாது" - அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பூசாரிகள் வாக்குவாதம்

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே அங்காளம்மன் கோயிலின் உண்டியல் பணத்தை தர முடியாது என அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • மறப்பறை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. • இந்த கோயிலில் காலம் காலமாக அதே பகுதியை சேர்ந்த சிலர் பூசாரி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. • மாசி மாதம் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவின் நிறைவு நாளில் வழக்கமாக கோயில் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். • அதன்படி நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ண வந்தனர். • அப்போது, கோயில் பரம்பரை பூசாரிகள் இந்த கோயில் தங்களுக்கு சொந்தமானது என கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். • போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி வெளியே அழைத்து சென்றனர். • இதற்கிடையே, அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரை ஊராட்சி தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR