தற்போதைய செய்திகள்

மதிமுக உட்கட்சி தேர்தல் - வேட்பு மனு விண்ணப்பம் பெற்றார் வைகோ

தந்தி டிவி

மதிமுக உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14 தேதி முதல் நடைபெற உள்ளது. அக்கட்சி தலைவர், பொது செயலாளர், துணை பொதுசெயலாளர் பொருளாளர், உள்ளிட்ட பதவிக்கான தேர்தலில் மதிமுகவை சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சி தேர்தல் பணிக்குழு தலைவர் அந்தரிதாசிடம் மதிமுக பொது செயலாளர் வைகோ வேட்பு மனு விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார். ஜூன் ஒன்றாம் தேதி விருப்ப மனுவை திரும்ப பெற கடைசி நாள் என்றும் ஜூன் 14ம் தேதி புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்