தற்போதைய செய்திகள்

மாதவன் மகன் பற்றி கேள்வி- "யாருடனும் எனது மகனை ஒப்பிட வேண்டாம்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பளீச் பதில்

தந்தி டிவி
• தனது மகனின் சொந்த விஷயங்களை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • கண்ணை நம்பாதே பட நேர்காணலின்போது, அவரது மகன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 18 வயதான தனது மகன், அவரது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்ததாகவும், இது அவரது சொந்த விஷயம் எனவும், இதில் தலையிட எங்களது குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தார். • மேலும், தங்களது மகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும், இதனை கேலி செய்வதை பெரிதாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கையை நகர்த்த முடியாது எனவும் 18 வயது சிறுவனுக்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பதையே தனது மனைவி கிருத்திகா வலியுறுத்தியதாகவும் உதயநிதி தெளிவுப்படுத்தினார். • நடிகர் மாதவனின் மகன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், தனது மகனை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என பதிலளித்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்