தற்போதைய செய்திகள்

LCU ஸ்டைலில்..பிரசாந்த் நீல்? "சலார்"ஆ இல்ல "KGF-3"-ஆ? - ஆச்சரியத்தில் இணையவாசிகள்

தந்தி டிவி

கேஜிஎஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒருசில காட்சிகள் தற்போது சலார் பட டீசரிலும் இடம்பெற்றுள்ளதால், இயக்குநர் பிரசாந்த் நீல் தனக்கென தனி யுனிவர்சை உருவாக்குகிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.

கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் பிரபாசை வைத்து இயக்கும் படம் தான் சலார். இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 2 கோடியே 10 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சலார் டீசரில், கேஜிஎஃப்-ல் இருந்ததைப் போலவே வசனங்கள், பின்னணி காட்சிகள் என ஒருசில விஷயங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜைப் போல் பிரசாந்த் நீலும் தனக்கென தனி யுனிவர்சௌ உருவாக்கி வருகிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. மேலும் இது கேஜிஎஃப் 3 எனவும் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்

TVK | Supreme Court | தவெக மீதான`குதிரை பேர’ புகார்.. வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

Neet Exam | Telegram | Delhi Court | வெளியான கோர்ட் தீர்ப்பு - அதிர்ச்சியில் `டெலிகிராம்’