தற்போதைய செய்திகள்

வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும்.. பிரதமர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

தந்தி டிவி

பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களால் வழங்கப்பட்ட ஆயிரத்து 200 பொருட்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்கும் அரசியல் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் சாதாரண மக்கள் தங்களின் அன்பின் வெளிபாடாக நேர்த்தியான ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், கலைப்பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். அதில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அனுமன் சிலையையும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வெங்கடேஸ்வரா கடவுளின் புகைப்படத்தையும் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், தனக்கு கிடைத்த அன்பளிப்பு பொருட்களை ஏலம் விட பிரதமர் மோடி முடிவெத்துள்ளார். வரும் 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ஏலம் நடைபெறும் என்றும், அதில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏலம் விடும் பொருட்களின் விலை 100 ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுத்துள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்