தற்போதைய செய்திகள்

மாயமான பெண் கொடூர கொலை... பல துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைப்பு.. போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த கில்லர்

தந்தி டிவி
• ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில், 30 வயது பெண்ணைக் கொன்று, உடலை பல துண்டுகளாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • புட்காம் பகுதியை சேர்ந்த தன்வீர் அகமது கான் என்பவர், கடந்த 8ம் தேதி தனது சகோதரி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். • பயிற்சி வகுப்புக்கு சென்ற சகோதரி வீடு திரும்பவில்லை என புகாரில் குறிப்பிட்டிருந்த நிலையில், அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். • இதனிடையே, மயாமான பெண்ணின் சகோதரர் தன்வீர் அகமது கான் அளித்த தகவலின் பேரில், சந்தேகத்திற்கு இடமான சிலரிடம் போலீசார், தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். • அதில், ஷபீர் அகமது வானி என்பவர், மாயமான பெண்ணை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. • கொலையை மறைக்க, பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி, பல்வேறு இடங்களில் புதைத்து வைத்ததாக கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • அதனைத் தொடர்ந்து ஆங்காங்கே புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை, ஷபிர் அகமதுவை வைத்து, போலீசார் மீட்டு வருகின்றனர்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு