தற்போதைய செய்திகள்

India vs West Indies - ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்தார் அஸ்வின் | Ind vs WI | Ashwin |

தந்தி டிவி

இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். போட்டியில் தனது 3வது விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். போட்டியின்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை பேட்டர்களை போல்டாக்கிய, இந்தியர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். இதுவரை அவர் 95 முறை பேட்டர்களை போல்டாக்கியுள்ளார். மேலும், மேற்கு இந்திய தீவுகளின் வீரர் டேகனரைன் சந்தர்பாலின் விக்கெட்டை அவர் வீழ்த்தியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை - மகன் ஆகிய இருவருடைய விக்கெட்டையும் வீழ்த்திய, முதல் இந்தியர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். 2011 ஆம் ஆண்டு டேகனரைன் சந்தர்பாலின் தந்தை ஷிவ்நரைன் சந்தர்பாலின் விக்கெட்டை, அஸ்வின் வீழ்த்தியிருந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்