தற்போதைய செய்திகள்

கொடைக்கானல் மலைப்பாதையில் நேர்ந்த சம்பவம் - மன உளைச்சலில் உயிரை மாய்த்த சிறுவன்

தந்தி டிவி

கொடைக்கானல் மலைப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட தகராறின் போது ஆபாச வார்த்தைகளை கூறி திட்டியதாக 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை சேர்ந்த விஜேஸ் பாண்டி என்ற சிறுவர் பெருமாள்மலை நோக்கி தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, மலைப்பாதையில் திரும்பும் போது நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது சிறுவர்களின் இரு சக்கர வாகனம் மோதியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த காரில் இருந்த நபர்கள் விஜேஸ் பாண்டியின் நண்பர்களை ஆபாச வார்த்தைகளை கூறி தாக்கி, வாகனத்தை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் தலையீட்டு சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, வீட்டிற்கு வந்த விஜேஸ் பாண்டி நடந்த சம்பவத்தை எண்ணி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, திடீரென விஜேஸ் பாண்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சிறுவனின் சகோதரர் போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், மெக்கானிக் வினோத் மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரை ஆபாசமாக திட்டுதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு