தற்போதைய செய்திகள்

பலியான யானையை காட்டில் ஆங்காங்கே வீசி சென்ற வனத்துறையினர்.. தருமபுரியில் அதிர்ச்சி..!

தந்தி டிவி

தர்மபுரியில் உயிரிழந்த காட்டு யானையை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர், உடல் பாகங்களை வனப்பகுதியில் வீசிச்சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னாறு வனப்பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த‌து. இதையடுத்து வனத்துறையினர், மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் அந்த யானை வயிற்றில் 12 மாத யானை குட்டி இருந்தும் தெரியவந்தது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை அடக்கம் செய்யாமல், வனப்பகுதியில் ஆங்காங்கே வீசிவிட்டு சென்றுள்ளனர். உயிரிழந்த யானையில் உடல்கள் வனப்பகுதியில் சிதறி கிடப்பதை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்த‌னர். மேலும், யானைகள் பாதுகாப்பில் வனத்துறையினர் அலட்சியமாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?