தற்போதைய செய்திகள்

"அம்மா போல நானும்.." - முதல் உரையில் ராணியின் மகன் உருக்கமான பேச்சு

தந்தி டிவி

இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானதையடுத்து, பாரம்பரிய வழக்கப்படி எலிசபெத் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், பட்டத்து இளவரசருமான 73 வயது சார்லஸ், இங்கிலாந்தின் அடுத்த மன்னராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். சுமார் 7 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில், கடந்த ஆண்டு மறைந்த தனது தந்தை பிலிப், தற்போது மறைந்த தாயார் எலிசபெத் ஆகியோரை நினைவு கூர்ந்தார். கடந்த 1947-ஆம் ஆண்டு, ராணி எலிசபெத் தனது 21-ஆவது பிறந்த நாளில், தனது வாழ்வை நாட்டு மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பதாகக் கூறியதை தனது உரையில் குறிப்பிட்ட சார்லஸ், அதேபோன்று கடவுள் தனக்கு அளிக்கும் எஞ்சிய காலம் முழுவதும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற இருப்பதாக உறுதியளித்தார்.

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?

DMK | Congress | திமுக-காங்., கூட்டணி நிலை என்ன? - சுடச்சுட செல்வப்பெருந்தகை பிரஸ்மீட்