தற்போதைய செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் பயங்கர தீ விபத்து - 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மையம் முழுவதும் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நாகுரி என்ற பகுதியில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மையம் திடீரென தீ பிடித்து முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் விற்பனை மையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விபத்தில் எரிந்து நாசமாகின. பற்றி எரிந்த தீயை அணைக்க, 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதை அடுத்து மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்