தற்போதைய செய்திகள்

கால் வைக்குற இடமெல்லாம் என்டர்டெயின்மென்ட்... அப்டி என்ன இருக்கு Slovakia நாட்டுல?

தந்தி டிவி

கால் வைக்குற இடமெல்லாம் என்டர்டெயின் மென்ட்... திரும்பி பாக்குற இடமெல்லாம் என்ஜாய்மென்ட்னு... நம்மள சுத்தி பாக்க வச்சே டயார்ட் ஆக்குற Slovakia நாட்டுக்கு... உடனே கிளம்பலாம் வாங்க...

ஆரம்பத்துல... ஒன்னா இருந்த czechslovakiaதான்… சில பிரச்சனைகளால ரெண்டா பிரிஞ்சு Czech மற்றும் Slovakiaன்னு தனித்தனி நாடுகளா உருவாகிடுச்சாம்… சரி சரி நாட்ட பத்தியே பேசி பிலேடு போடாம… நாம வந்த வேலைய ஆரமிக்கலாம் வாங்க…

ஊருக்குள்ள வலது கால எடுத்து வச்சதுமே… கம்பீரமான தோற்றதோட நம்மள வரவேற்கும் இதுதான் Bojnice கோட்டை…

12ஆம் நூற்றாண்டுல ரோமானியர்களாள கட்டப்பட்ட இந்த கோட்டைக்கு சுற்றுவாசிகள் குவியுறது மட்டுமில்லாம… நம்ம ஹாலிவுட் வட்டாரங்கள் ஹிஸ்ட்டாரிக்கல் படம் எடுக்குறதுக்கான.... ஃபேவரைட் ஸ்பாட்டாவும் இருக்கு இந்த கம்பீர கோட்டை...

அமைதியா இருக்க கோட்டைக்குள்ள போறதுக்கு கொஞ்சம் பயமா இருந்தாலும்… இந்த பிரம்மாண்ட தூண்கள்ல இருக்க ஓவியங்களெல்லாம் நம்மளை பிரம்மிக்க வைக்குதுனே சொல்லலாம்…

சின்ன வயசுல… sketch crayons-அ எடுத்து பெரிய ஆர்ட்டிஸ் லெவலுக்கு… கதவு, பீரோ, சுவருன்னு ஒரு இடம் விடாம... நல்லாருக்க இடத்துல அசிங்கமா கிறுக்கிவச்சு அட்டகாசம் பண்ணுவோம்...

இப்டி நாம கன்றாவிய வரைஞ்ச drawin-அ வச்சு... Bratislavaல ஒரு ஹோட்டலே கட்டிருக்காங்க…

பார்க்க குட்டீஸ்களோட drawing book மாதிரி கலர்ஃபுல்லா இருக்கும் இதுதான் Hotel Galeria... பச்சை சிகப்பு மஞ்சள்ன்னு வெளிய பாக்க எப்டி கலர்ஃபுல்லா இருக்கோ… அதே மாதிரி ஹோட்டலோட மூலை முடுக்குளையும் decorate பண்ணி வச்சிருக்காங்க… ஆகமொத்தம் இந்த ஓட்டலுக்கு வர்ர customers - ஓட வயித்துக்கும் சேத்து கண்ணுக்கும் விருந்துவைக்குது இந்த இடம்… 

Churchனு சொன்னாலே… பெரிய ஜன்னல் வச்ச வெள்ள கலர் கட்டிடம் தான் நியாபகத்துக்கு வரும்… இப்டி பிரம்மாண்டமான சர்ச்களுக்கு மத்தியில நம்ம Slovakia மக்கள் எளிமையான முறையில... மர கட்டைகள வச்சு wooden church கட்டிருக்காங்க…

Hronsek பகுதியில இருக்க இந்த தேவாலயத்துல bench chair மட்டுமில்லாம… சுவரு சீலிங் மாடின்னு… அம்புட்டு இடத்தையும் மரத்தாலயே செதுக்கு செதுக்குனு செதுக்கி வச்சிருக்காங்க… 

நடு நடுங்க வைக்கும் ஐஸ் குகை...

உள்ள நுழையும் போதே… freezerகுள்ள இருக்க மாதிரி ஃபீல் குடுக்குற இந்த இடம் தான் Dobsikska ice cave… இந்த குகையோட ஸ்பெஷல் என்னன்னா… சித்திரை வெயில் சிக்கன் 65 மாதிரி பொறிச்சு எடுத்தாலும்… பாறைகளுக்கு நடுவுல இருக்க ஐஸ் கட்டிகள் மட்டும் கரையவே கரையாதாம்… சிட்டிக்குள்ள டெய்லியும் பிசியா வேலைக்கு போறவங்களுக்கு weekend break -ஆ இருக்கு இந்த இடம்… 

ஒரே தாவில் பக்கத்து நாட்டுக்கு செல்லலாம்...

Slovakia நாட்டின் தலைநகரான Bratislavaதான்… உலகத்துலயே இரண்டு நாடுகளை இணைக்ககூடிய நகரமாம்… இந்த சிட்டியில இருந்து Austria இல்லனா Hungary க்கு போகனும்னா... டக்குனு inky pinky ponky போட்டு டக்குனு போகலாம்…

தடபுடலான விருந்துக்கு என்டுகார்டு போடனும்ன்னா Visnova Strudla மறக்காம சாப்பிடனுமாம்…

கால் வைக்குற இடமெல்லாம் என்டர்டெயின் மென்ட்...உணவு... சுற்றுல்லாதளம்... entertainmentன்னு... நம்பி வரும் சுற்றுல்லாவாசிகளை சந்தோஷமா அனுப்பும் Slovakiaக்கு... எத்தனை முறை வந்தாலும் சலிக்கவே சலிக்காது…

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்