தற்போதைய செய்திகள்

"ஆதாருடன் EB நம்பர் இணைக்க வேண்டும்" - மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு | EB Number | Adhar Card

தந்தி டிவி

தமிழகத்தில் மின்சார முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது அவசியம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் லிங்க் ஒன்றை மின்சாரத் துறை வடிவமைத்துள்ளது.

தற்காலிகமாக சோதனை ஓட்ட முறைப்படி இந்த லிங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது

மின் மோசடிகளை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை சேர்க்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கொண்ட நுகர்வோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான இலவச மின்சாரம், மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் தங்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | "தமிழ்நாட்டின் நிரந்தர ட்ரெண்ட் கருப்பு, சிவப்பு தான்.." - முதல்வர் சொன்ன வார்த்தை