சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் குடித்துவிட்டு இரு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களிடம், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில்,10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்து வருகின்றனர்.
அதன்படி, தற்போது வரை, 8 ஆயிரத்து 912 வழக்குகளில் அபராதம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அபராத தொகை செலுத்தாத வாகன ஓட்டிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.