தற்போதைய செய்திகள்

தொடர் மின்வெட்டு...நள்ளிரவில் சாலையில் குவிந்த மக்கள் பரபரப்பாகிய மீஞ்சூர்

தந்தி டிவி

திருவள்ளூர் மீஞ்சூரில் தொடர் மின்வெட்டடைக் கண்டித்து நள்ளிரவில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 2 நாட்களுக்கு முன்பு 1 நாள் மின் தடை செய்து பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், நேற்று மாலை மின்சாரம் தடை பட்டதாகவும், அதன்பிறகு 2 முறை வெறும் 5 நிமிடங்கள் மற்றும் வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மின்வெட்டு சரியாகாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். மின்வாரிய அலுவலகமும் உரிய தீர்வு வழங்காத நிலையில், பொதுமக்கள் மீஞ்சூர் பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ