தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை - பெற்றோர் கொடுத்த பரபரப்பு புகார்

தந்தி டிவி

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை - பெற்றோர் கொடுத்த பரபரப்பு புகார் 

திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரின் மனைவி உமா. இவர்களின் மகள் 19 வயதான ஸ்ரீநிதி, தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். காலை உமா எழுந்து பார்த்த போது மகள் ஸ்ரீநிதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். தாங்கள் ஏற்கனவே குடியிருந்த வீட்டின் உரிமையாளரான வினோத் - ரேவதி தம்பதியரிடம் 2 சவரன் நகைகளை வாங்கி அடமானம் வைத்ததாகவும், ஆனால் திடீரென 7 சவரன் நகைகளை வாங்கியதாக அவர்கள் கூறியதால் காவல் நிலையம் வரை சென்றதாக உமா தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இறப்பதற்கு முன்பாக தன் மகள் போலீஸ் ஒருவரிடம் பேசியதாகவும் உமா தெரிவித்தார். எனவே தங்களை மிரட்டிய வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்