தற்போதைய செய்திகள்

கல்லூரியில் ரூ.1.69 கோடி கையாடல் - கைதான முக்கிய நபர்

தந்தி டிவி

சென்னை YMCA PHYSICAL EDUCATION கல்லுாரியில், ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் கையாடல் செய்த முன்னாள் நிர்வாகியை, புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை நந்தனம் ஓஎம்சிஏ கல்லூரியில் தாளாளராக பணிபுரிந்து வரும் பெஞ்சமின் பிராங்கிளின் அளித்த புகாரில், கடந்த 2016ம் ஆண்டு, கல்லூரி தலைவராக இருந்த லிபி பிலிப் மேத்யூ, தாளாளரின் செயலாளராக இருந்த கோசி மேத்யூ, பால்சன் தாமஸ் ஆகியோர், கடந்த 2019ம் ஆண்டு மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணமாக ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை வசூல் செய்து, அந்த பணத்தை கையாடல் செய்ததாக தெரிவித்திருந்தார்.

அதன் பேரில் முக்கிய நபரான பால்சன் தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்