சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார் அதன் நேரலை காட்சிகளை தற்போது காணலாம்..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணைகள் மற்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 177 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் 19 ஆய்வக நுட்புணர் நிலை-2 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் ஆகியவற்றை வழங்கிடும் அடையாளமாக மூன்று ஒப்பந்த செவிலியர்கள் ஐந்து இருட்டறை உதவியாளர்கள் 3 ஆய்வக நுட்புணர் மற்றும் நான்கு இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.