தற்போதைய செய்திகள்

ஓனரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடுக்கிய கொடூரன் - காதலியோடு சேர்ந்து பயங்கரம்

தந்தி டிவி

கேரளாவில் ஹோட்டல் உரிமையாளர் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரின் உடல் மின் கட்டர் மூலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்தவர் ஹோட்டல் உரிமையாளர் சித்திக். இவர் பாலக்கோடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சித்திக் நடத்தி வந்த ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்த முகமது சிபிலி மற்றும் அவரது காதலியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சித்திக்கின் உடலை உடற்கூராய்வுக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதன் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், மின்சார கட்டர் மூலம் சித்திக்கின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சித்திக்கின் மார்பில் தான் காயம் அதிகமென்றும், விலா எலும்பு முறிந்து, தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி