தற்போதைய செய்திகள்

"மோசடி வழக்கில் சிக்க வைக்க முதல்வர் பினராயி விஜயன் சதி" - கேரள மாநில காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

கேரளாவில் தன்னை மோசடி வழக்கில் சிக்க வைக்க முதல்வர் பினராயி விஜயன் சதி செய்வதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறியுள்ளார். கேரளாவில் புராதனப் பொருட்களை விற்பதாக மோசடி செய்த மோன்சன் மாவுங்கல் என்பவருக்கு உதவியதாக சுதாகரன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், மோசடி வழக்கில் தன்னை சிக்க வைக்க பினராயி விஜயன் சதி செய்வதாக சுதாகரன் கூறியுள்ளார். குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு தாம் ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்