தற்போதைய செய்திகள்

67 வயது மூதாட்டி கைது.. அடிதடியில் அலைமோதும் குடும்பம் - அதிர்ச்சியில் உறவினர்கள்...

தந்தி டிவி
• சென்னையில் குடும்பத் தகராறில், தாக்குதலுக்கு உள்ளான மூதாட்டியை காவல்துறை கைது செய்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். • சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஹரிகரன் - சங்கிதா தம்பதி மனகசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். • கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்குள் கைக்கலப்பாக மாறியதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், காவலர்கள் உதவியோடு கணவர் வீட்டுக்குச் சென்ற சங்கீதா, உடைமைகளை எடுத்து சென்றுள்ளார். • அதே நேரத்தில், கணவரின் சகோதரி கவிதாவையும், இருசக்கர வாகனங்களையும், சங்கீதாவின் சகோதர‌ர் தாக்கியதாக கூறப்படுகிறது. • கவிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தாயார் சரசுவை காவல்துறையினர் கைது செய்து பின்னர் காவல்நிலைய பிணையில் விடுவித்துள்ளனர். • ஆனால், தாக்குதலுக்கு உள்ளானவரையே காவல்துறையினர் கைது செய்வதா? என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை