தற்போதைய செய்திகள்

மத்திய இணை அமைச்சர் முன் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட பாஜக - திமுக நிர்வாகிகள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில், குருவாயூர், கச்ச கவுடா ரயில்கள் நின்று செல்லும் சேவையை தொடங்கி வைத்த போது, திமுக - பாஜக நிர்வாகிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருவாயூர், கச்ச கவுடா ரயில்கள் நின்று செல்லும் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது, திமுக - பாஜக நிர்வாகிகள் ரயில் நிலையத்தில் அங்கும், இங்கும் ஓடி தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நடைமேடையில் கூடிய இரு கட்சி நிர்வாகிகளையும் போலீசார் அப்புறப்படுத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து