தற்போதைய செய்திகள்

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து...ரூ.41 லட்சம் வழங்க உத்தரவு

தந்தி டிவி

பிளம்பர் ஜோசப் என்பவரது மரணத்திற்கு 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது தாய் ஸ்டெல்லாவும், மனைவி சத்திய பிரியாவும் இணைந்து சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி. சந்திரசேகரன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது பைக் ஓட்டிச் சென்ற தினேஷ் குமாருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், வாகனத்திற்கு காப்பீடும் செய்யப்படவில்லை என்றும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதுயடுத்து, ஜோசப்பின் மரணத்திற்கு 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க, பைக் உரிமையாளர் சங்கருக்கும், அதை ஒட்டிச் சென்ற அவரது மகன் தினேஷ் குமாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தொகையை இருவரும் இணைந்து மூன்று மாதத்திற்குள் ஜோசப்பின் தாய், மனைவிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது