தற்போதைய செய்திகள்

சென்னையின் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் 2 நாளாக தோழியுடன் இருந்த ஐடி ஊழியர் நிர்வாணமாக சுற்றி திரிந்ததால் பரபரப்பு

தந்தி டிவி

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், மதுபோதையில் நிர்வாணமாக சுற்றிய நபர் ஒருவர், மற்றவரின் அறைக்குள் நுழைந்த‌தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில், வட மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களது அறைக்குள் இளைஞர் ஒருவர் முழு நிர்வாணத்துடன் உள்ளே நுழைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் கூச்சலிட்டதோடு, அந்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு மற்ற அறைகளில் இருந்து வெளியே வந்த வாடிக்கையாளர்கள், நீண்ட நேரமாக அந்த இளைஞர் நிர்வாணமாக சுற்றுவதாக தெரிவித்தனர். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்த‌தால், காவல்துறையை வரவழைத்து, அந்த இளைஞரை ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த இளைஞர் ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் என்பதும், பெண் தோழியுடன் 2 நாட்களாக தங்கியிருந்த‌தும் தெரிய வந்த‌து. மேலும், போதையில் இருந்த‌தால் நிதானமின்றி இவ்வாறு செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு