தற்போதைய செய்திகள்

பெண் மதபோதகரை கொன்ற மதுப்பிரியர்.. திருட்டு போனால் அம்பலமான திருட்டுத்தனம்.. ஷாக் வாக்குமூலம்

தந்தி டிவி

சென்னையில் பெண் மதபோதகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே அகரம் தென்பகுதியை சேர்ந்தவர் பெண் மதபோதகர் எஸ்தர். இவரை கடந்த மே மாதம் காணவில்லை என கூறி அவரது மகள் போலீசில் புகாரளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் எஸ்தரை தேடி நடத்தி வந்த போலீசார், கடந்த ஜூன் மாதம் மதுரப்பாக்கம் கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்டனர். விசாரணையில், எஸ்தரின் செல்போன் மாயமாகி இருப்பதை அறிந்த போலீசார், அவரின் செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், மதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் போலீசில் சிக்கினார். விசாரணையில், கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தனியாக நின்ற எஸ்தரிடம் மது அருந்த பணம் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றதாகவும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து லோகநாதனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Breaking | Crime | பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் | தட்டி தூக்கிய போலீசார்

Chennai School Student Murder | சென்னையில் பட்டப்பகலில் +2 மாணவன் அடித்து கொ*ல

Breaking | TASMAC | Highcourt | டாஸ்மாக் முறைகேடு விவகாரம் | ஹைகோர்ட் அதிரடி

Today Gold Price | ஒரே நாளில் இறங்கி ஏறிய தங்கம் விலை - தற்போதைய நிலவரம் என்ன?

Breaking | Highcourt | நடைபாதையில் காரை ஏற்றிய தொழிலதிபர் | துடிதுடித்து பலியான சிறுவன்