தற்போதைய செய்திகள்

அமித்ஷாவை சந்தித்த அதிமுக எம்.பி. தம்பிதுரை

தந்தி டிவி

    டெல ்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக, பாஜக கூட்டணி குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி விஷயங்கள் குறித்து ஆலோசித்த‌தாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்தித்து பேசிய நிலையில், தற்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்