தற்போதைய செய்திகள்

இந்திய ராணுவ விமானத்தில் சாகசம் - அசத்திய தமிழக பெண்

தந்தி டிவி

டெல்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சி போட்டியில் ராணுவ விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த சாகச நிகழ்ச்சியில், தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கல்லூரியை சேர்ந்தவர் தேசிய மாணவர் படை மாணவி கோகிலவாணி.

இவர், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப் பயிற்சியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு இந்திய ராணுவ பயிற்சி விமானத்தில், சுமார் 2 கிலோ மீட்டர் உயரம் பறந்து பாராசூட் மூலம் குதித்து சாகசம் செய்த அணியில் இடம் பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்