தற்போதைய செய்திகள்

#Breaking || அரசியலில் திடீர் ட்விஸ்ட்.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் கூட்டணி கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜிகேவாசன் கூறியுள்ளார். மேலும் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் எனவும் உறுதியளித்துள்ளார்.

அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் நடுவே அதிகார மோதல் நீடிப்பதால், தமாகா தான் போட்டியிடும் என நேற்று வரை சொல்லப்பட்டது. ஆனால் இன்று காலையில் திடீர் திருப்பமாக அதிமுக போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலையில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் தான் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. தற்போது களம் அதிமுக - காங்கிரஸ் என மாறியுள்ளது.  

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்