தற்போதைய செய்திகள்

சித்திரை திருவிழாவில் இளைஞர் பலியான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.. காட்டி கொடுக்க முயற்சி..மிதித்தே கொன்ற கும்பல்

தந்தி டிவி

மதுரை, சித்திரை திருவிழாவில் கூட்டல் நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பல், இளைஞர் ஒருவரை மிதித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 5 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மதுரை, எம்கே புரத்தை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் கலந்து கொண்டுள்ளார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல், கூட்ட நெரிசலை பயன்படுத்தி கையில் பயங்கர ஆயுதங்களுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் கும்பலை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில், இளைஞர்களை கும்பல் தாக்கிய நிலையில், இளைஞர் சூர்யாவை கூட்ட நெரிசலில் மிதித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கருப்பாயூரணியை சேர்ந்த 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்