தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி சண்டையை பிரிக்க சென்ற உறவினர் மார்பில் குத்தி கொலை - நாமக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கணவன், மனைவிக்கு இடையேயான தகாராறை தடுக்க வந்த உறவினர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம், எல்ஐசி பகுதியை சேர்ந்த தம்பதி விஜயகுமார், ரோகினி. இதில், விஜயகுமார் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதுபோதையில் வந்த விஜயகுமார், வழக்கம் போல் மனைவியுடன் தகராறு செய்யவே, மோதல் முற்றியுள்ளது. இதனிடையே, விஜயகுமாரின் சித்தப்பாவான சேட்டு, தகராறில் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார். எங்கள் குடும்ப தகராறில் ஏன் தலையிடுகிறாய் என கூறி சேட்டின் மார்பு மற்றும் கழுத்தில் விஜயகுமார் கத்தியால் குத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனே அக்கம்பக்கத்தினர் சேட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்