இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக திகழ்பவர் புஜாரா என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறி உள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புஜாரா சேர்க்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன், புஜாரா நீக்கப்படவில்லை... ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என நம்புவதாகக் கூறி உள்ளார். புஜாராவின் சமீபத்திய பேட்டிங் செயல்பாடுகளை வைத்து அவரை நீக்கி இருந்தால், மற்றவர்களின் பேட்டிங்கையும் கணக்கில்கொள்ள வேண்டும் என ஹர்பஜன் பேசி உள்ளார்.