தற்போதைய செய்திகள்

மரத்தின் இலையால் பறிபோன உயிர் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் வில்லியனூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு மரத்தின் இலைகள், தன் வீட்டினுள் விழுவதாக கூறி தகராறு செய்தவர் கொலை செய்ப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வில்லியனூர் கிராமத்தில் ஆனந்தராஜ்

மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அருகருகே வசித்து வந்தனர். நேற்றிரவு இருவரும் மது அருந்திய நிலையில், அப்போது ஆனந்தராஜ் வீட்டில் உள்ள மரத்தின் இலைகள் தன்னுடைய வீட்டில் விழுவதாக கூறி, ஹரிகிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயடைந்த ஹரிகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வளவனுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Armstrong CBI Investigation| ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களிடம் CBI திடீர் விசாரணை

Heavy Rain | Flood | நேற்று முதல் தலைநகரை கலங்கடிக்கும் கனமழை - சாலைகளை ஆக்கிரமித்த வெள்ளம்

Chennai Lady Death Issue| சென்னையை பதறவைத்த பெண் மரணத்தில் ஷாக் திருப்பம்

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"