ரஷ்யாவின் வாடகை ராணுவம், நாட்டின் ஒருசில நகரங்களை கைப்பற்றியுள்ளதால் உள்நாட்டு போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது..
உக்ரைன் போரில் ரஷ்ய அரசு, வாக்னர் குரூப் (Wagner group) எனப்படும் வாடகை ராணுவத்தை பயன்படுத்தியது. ஆனால் போர்க் களத்தில் வாக்னர் படைப்பிரிவுக்கு, ரஷ்ய ராணுவம் போதிய ஆயுத உதவிகளை வழங்காததால், வாக்னர் படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, உக்ரைன் போரில் இருந்து வாக்னர் படைப்பிரிவு பின்வாங்கியதோடு, ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்நிலையில், ரஷ்யாவின் ரோஸ்டோவ்(Rostov) நகரை வாக்னர் படைப்பிரிவு அதிரடியாக கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்திற்கும், வாக்னர் படைப்பிரிவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யா முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதோடு, தலைநகர் மாஸ்கோவில்(moscow) கவச வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன...