தற்போதைய செய்திகள்

280 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட படகு - 2வது முறையாக கோவை மாணவர்கள் தகுதி

தந்தி டிவி

மொனாக்கோ நாட்டில் நடக்கும் சர்வதேச மாற்று எரிசக்தி படகு போட்டிக்கு கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 2வது முறையாக தகுதி பெற்றுள்ளனர்.வழக்கமான எரிசக்தியை பயன்படுத்தாமல் பேட்டரி , சோலார் போன்ற மாற்று சக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்குவதை மொனாக்கோ அரசு ஊக்குவித்து, ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வருகிற ஜூலை மாதம் 3ம் தேதியிலிருந்து 8ம் தேதி வரை இந்த படகு போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தப் படகுப் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். யாளி 2.0 எனும் பெயரில் 280கிலோ எடை கொண்ட படகை கரிம நார் மூலம் உருவாக்கியுள்ள இந்த மாணவர்கள், சோலார், பேட்டரி, ஹைட்ரஜன் பியூல் மூலம் இந்த படகும் இயங்கும் வகையில் வடிவமைத்து உள்ளனர்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்