தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.07.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.07.2026)

thanthitv

பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா மீது மக்களவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வருகிறது,..

அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்க அரசு தயாராக இருப்பதால், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்...

தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா குறித்து, 10 மணி நேரம் வரை விவாதத்தை நீட்டிக்க அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்..

முதலில் 6 மணி நேரம் விவாதிக்க அனைத்துக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்போது 10 மணி நேரம் விவாதிக்க, சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல்...

போராடியது மாணவர்கள், பயங்கரவாதிகள் அல்ல என மாணவர்கள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பிய அவர், பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ரயில் நிலைய கவுண்டர்களில் டோக்கன் விநியோக முறையை செயல்படுத்த ரயில்வே முடிவு..

சோதனை அடிப்படையில் மேற்கு மத்திய ரயில்வேயில் அறிமுகம் செய்யும் இத்திட்டத்தை படிப்படியாக அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்த ரயில்வே திட்டம் ...

தமிழ்நாட்டிற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை...

காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது...

BREAKING || தமிழக அரசியலை பரபரக்க விட்ட குதிரை பேர வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Chennai Kilambakkam | கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றமா? | தீயாய் பரவும் தகவல்

DMK | Udhayanidhi | ஒன்று கூடிய MLAக்கள்.. உதயநிதி தலைமையில் அவசர ஆலோசனை

BREAKING | HRCE | TN Government | சென்னை, திருச்சி... பிரிக்கப்படும் 2 மண்டலங்கள்

Minister Marie Wilson | குடும்ப பிரச்சினை வழக்கு.. 3வது முறையாக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்