கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.....
சுமார் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்....
சென்னை திருவான்மியூரில் சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 சிலிண்டர்கள் பறிமுதல்.......
80 வயது தந்தை மற்றும் அவரது மகனைக் கைது செய்து போலீசார் விசாரணை......
தமிழக அரசு தடை செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அபாயங்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.....
விமான எரிபொருள் விலை உயர்வால் ஜூலை வரை சேவைகளை குறைக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு எடுத்துள்ளது......
அமெரிக்கா, ஐரோப்பா வழித்தடங்களில் விமான சேவை குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது......
சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது....
அறையை 4 பேர் பகிர்ந்து கொண்டு தங்கும் விடுதி கட்டணம் 6 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது....