தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

thanthitv

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2ஆயிரத்து 160 ரூபாய் குறைந்துள்ளது...ஒரு கிராம் தங்கம்14 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

  • தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு10 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது...ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

  • மத்திய கிழக்கு போர் எதிரொலியால் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 75 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது...நிஃப்டியும் 516 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23 அயிரத்து 261 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது....

  • அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4 சதவீதம் உயர்ந்துள்ளது...பிரென்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரல் 112 டாலராக வர்த்தகமாகிறது...

  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் 3வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார்...திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறுகிறது...

  • திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...

  • தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வரவுள்ள நிலையில், விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

  • சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்...திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் விசிக தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், தொகுதி பங்கீடு விரைவில் இறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...

🔴LIVE : வெளியானது நாதக தேர்தல் அறிக்கை

#BREAKING || CM Stalin | VCK | Thirumavalavan | DMK Alliance | விசிகவுக்கு இறுதியான சீட்?

Iran Israel War | ஈரான் ஈரக்குலையை அறுத்த இஸ்ரேல் - இந்தியாவில் அதலபாதாள சரிவு.. ரத்தக்களரி

#Breaking || Gold Rate Today | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிடுச்சா!

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’