கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள், விவசாய கூலிகள், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசலை இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது....
சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது...ஏரிகளில் 69 சதவீதம் நீர் இருப்பு உள்ளதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.....
வாட்டி வதைக்கும் கோடை வெயிலிலால் கேன் குடிநீர் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், உணவு பாதுகாப்பு துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது....தரமற்ற கேன் குடிநீரை விற்பனை செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம், மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுதத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்....ஐ.ஓ.சி ஆயில் நிறுவனம் நிலுவை வைத்துள்ள 50 கோடி ரூபாய் வாடகை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்...
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்..
தூங்கா நகரமான மதுரையில், உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா களைகட்டியுள்ளது....
மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, மாப்பிள்ளை வீட்டார் விருந்தாக 1 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது....... 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது...
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக, அவருடைய வாகனங்கள் மதுரை நோக்கி புறப்பட்டுள்ளன.....தங்கக் குதிரை, சேஷ வாகனம், கருட வகனம் மற்றும் தங்க பல்லக்கு உள்ளிட்டவை சிறப்பு பூஜை செய்து எடுத்துச் செல்லப்படுகின்றன...