சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது....
அறையை 4 பேர் பகிர்ந்து கொண்டு தங்கும் விடுதி கட்டணம் 6 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது....
விமான எரிபொருள் விலை உயர்வால் ஜூலை வரை சேவைகளை குறைக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு எடுத்துள்ளது......
அமெரிக்கா, ஐரோப்பா வழித்தடங்களில் விமான சேவை குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது......
சில தொகுதிகளில் விசிகவினர் கூட்டணி கட்சிக்கு ஒத்துழைக்கவில்லை என புகார் வந்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்......
கூட்டணி கட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் குறித்து தகவல் திரட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்....
தனித்து ஆட்சி அமைக்கும் வலிமையை விஜய் பெறவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.....
திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை தான் விஜய் பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.....
சுமார் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்....
தமிழக அரசு தடை செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அபாயங்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.....