தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

thanthitv
  • என்.டி.ஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது...தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வரும் நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...

  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது..இறுதி நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விருப்ப மனுதாரர்களிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்...

  • சென்னையில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது...திமுக உடன் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில், தேர்தல் குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...

  • நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று திருத்தணியில் இருந்து முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்...சோளிங்கர், ராணிப்பேட்டையிலும் இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

  • சட்டமன்ற தேர்தலையொட்டி, சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை தொடங்குகிறது...நாளை மற்றும் நாளை மறுதினம் என இரண்டு நாட்கள் நேர்காணல் நடைபெறும் நிலையில், தென் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...

  • தமிழகத்தில் வாக்குப்பதிவு மற்றும் VVPAT இயந்திரங்கள் சுழற்சி முறையில் அனுப்பி வைக்கும் முதற்கட்ட பணி (First Randomization) இன்று மாவட்டந்தோறும் தொடங்குகிறது...மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெறுகிறது...

  • தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான 12-D படிவம் விநியோகம் இன்று தொடங்குகிறது...வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தகுதியுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று படிவங்களை வழங்குகின்றனர்...

  • மேற்கு வங்கத்தில் SIR-யின் அடிப்படையில் திருத்தப்பட்ட முதல் கூடுதல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது...இறுதி வாக்காளர் பட்டியலில், சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஆவண சரிபார்ப்புக்கு பின் மாலை வெளியாகிறது....

  • தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது...வழக்கில் 9 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்குகிறார்....

  • அசாமில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்...விமானப்படைத் தளத்தின் வரைபடங்கள், போர் விமானங்களின் இயக்கம் குறித்த விவரங்களை பகிர்ந்த நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...

NR Congress | Puducherry Election | வேட்பாளர் பட்டியல் - வெளியிட்ட என்.ஆர்.காங்கிரஸ்

Petrol Crisis | LPG Shortage | உலகையே ஒருவழியாக்கிய எரிபொருள் விவகாரம் - இந்தியாவில் விலை ஏற்றமா?

Breaking | TVK Vijay | Election | வடசென்னையில் ஸ்பாட்டை குறித்த விஜய் | ரெடியான பிரம்மாண்ட பிளான்

BJP Sarathkumar | ``எனக்கு பொறுப்பே கொடுக்காம..’’ - உடைத்து சொன்ன சரத்குமார்

ADMK | வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக