தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.04.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

thanthitv

தமிழக சட்டமன்ற தேர்தல் - இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன..

நாகர்கோவிலுக்கு மதியம் 1.25 மணிக்கும், மதுரைக்கு இரவு 9.55 மணிக்கும், கோவை போத்தனூருக்கு இரவு 11.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கம்...

எழும்பூர் - நாகர்கோவில் : மதியம் 1.25

எழும்பூர் - மதுரை : இரவு 9.55

எழும்பூர் - கோவை போத்தனூர் : இரவு 11.55

தேர்தல் - நாளை வெள்ளியங்கிரி மலையேற தடை

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, நாளை வெள்ளியங்கிரி மலையில் ஏறவும், கோவை குற்றலாத்திற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வனத்துறையினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்...

தேர்தல் - 1.40 லட்சம் போலீஸ், 300 கம்பெனி துணை ராணுவப்படை பாதுகாப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீஸார் மற்றும் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

5 ஆயிரத்து 938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....

5,938 பதற்றமான வாக்குச்சாவடிகளில்

கூடுதல் பாதுகாப்பு - தேர்தல் ஆணையம்

வாக்குச் சாவடி மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்....

வாக்காளர்களுக்கு மாதிரி கூப்பன்கள், காசோலைகள் வழங்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...

ரூ.1,262 கோடி பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....

ரொக்கப் பணமாக 543 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்...

MK Stalin | விடிந்தால் தேர்தல்.. திமுகவினருக்கு CM ஸ்டாலின் போட்ட கட்டளை

Ajithkumar || Case திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கோர்ட் கொடுத்த பரபரப்பு உத்தரவு

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்

Firecracker Accident || 13 பேரை காவு வாங்கிய பட்டாசு விபத்து .. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு

Kanja Arrest | சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் கருப்பபாண்டி திருச்சியில் வைத்து கைது