முக்கிய செய்திகள்

நெல்லை பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - கொதித்தெழுந்த வைகோ

தந்தி டிவி

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய இரு பட்டியலின இளைஞர்களை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நிர்வாணப்படுத்தி தாக்கி, பணம் மற்றும் கைபேசிகளை பறித்துச் சென்றது மன்னிக்கவே முடியாத செயல் என குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 6 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறை தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு