முக்கிய செய்திகள்

விதிகளை மீறிய அரசு பேருந்து.. அடித்து தூக்கி வீசிய லாரி - 12 பேருக்கு நேர்ந்த கதி.. சென்னை NH-ல் பயங்கரம்

தந்தி டிவி
• உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் எதிர் திசையில் சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் படுகாயம் • பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் வழியாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி நோக்கி சென்றது. • இதற்கிடையே ஆசனூரில் விபத்துகளை தடுப்பதற்காக சாலையின் குறுக்கே தடுப்பு கட்டை போடப்பட்டுள்ளது. • இதனால் பெங்களூரு ஆசனூர் சாலையில் இருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். • இந்தப் பயண தூரத்தை குறைப்பதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் திட்டக்கூடிய சேர்ந்த தங்கவேல் 47 என்பவர் அரசு பேருந்து நெடுஞ்சாலையின் எதிர் திசையில் சாலை விதிகளுக்கு புறம்பாக இயக்கியுள்ளார். • அப்போது பெரம்பலூரில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற லாரி மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. • இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகள் காயமடைந்தனர். • காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்து கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • தொடர்ந்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rain வங்க கடலில் தீவிரமாக உருமாறுகிறது - இப்ப கரெக்ட்டா எந்த லொகேஷன்ல இருக்கு தெரியுமா

Gem Veeramani Issue Update| யார் யாருக்கு பணம் செட்டில் செய்தார் `ஜெம்’ வீரமணி? - கிடைத்தது துப்பு

Dharapuram Vote தாராபுரத்தில் என் ஓட்டு யாருக்கு? ஒரு முடிவோடு ஓட்டுபோடும் 1,236 வாக்காளர்கள்

CM Vijay | 2வது நாளாக தீவிரம் காட்டும் முதல்வர் விஜய்

Gold Price Today | மாற்றத்தை காட்டிய தங்கம் விலை