முக்கிய செய்திகள்

திடீரென வீடு புகுந்து.. மனைவி முன்னே கணவனை கொடூரமாக வெட்டி கொன்ற கும்பல்..தூங்கிக் கொண்டிருந்த போதே நடந்த பயங்கரம்

தந்தி டிவி
• ஆவடி அருகே வீட்டில் இருந்தவரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் யோகேஸ்வரன். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து யோகேஸ்வரனை சரமாரியாக வெட்டினர். • இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அ • ப்போது, யோகேஸ்வரன் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். • இதற்கொடையே, அக்கும்பல் தப்பிச் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். • முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு யோகேஸ்வரன் சுறா என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. • இதற்கு பழி தீர்ப்பதற்காக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்