முக்கிய செய்திகள்

BBC பஞ்சாபி பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரை தற்காலிக முடக்கம்

தந்தி டிவி
• இந்தியாவில் பிபிசி பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. • காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப், டெல்லி போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. • இதற்கிடையே இணையத்தை உன்னிப்பாக கவனிக்கும் அரசு முகமைகள் கோரிக்கையை ஏற்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. • அந்த வகையில் காலிஸ்தான் ஆதரவு செய்திகளை பரப்பிய 6 யூடியூப் சேனல்களை அரசு கோரிக்கையை ஏற்று கூகுள் முடக்கியிருக்கிறது. • ட்விட்டர் நிறுவனமும் அம்ரித்பால் சிங்கை பின்பற்றிய 120-க்கும் அதிகமானோர் கணக்குகளை சஸ்பென்ட் செய்திருக்கிறது. இந்த சூழலில் பிபிசி பஞ்சாபி பிரிவு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டது. • சட்ட நடவடிக்கைக்காக இந்த கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் தகவல் தெரிவித்திருந்தது. • இதேபோன்று பிபிசி பஞ்சாபி கணக்கை கையாண்ட செய்தியாளர்கள் கணக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

DMK | CM Stalin | திமுக கொடுத்த புதிய வாய்ப்பு.. இதுதான் முதல்முறை

DMK | CM Stalin | Trichy Siva | திமுக சார்பில் இறங்கிய திருச்சி சிவா.. நேரடியாக வந்த முதல்வர்

CM Stalin | "ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை.." - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதிவு

Temple Property | Madurai | "சாமிக்கு ஓட்டு இல்லை என்பதால் கோயில் சொத்துகளை மீட்கவில்லையா?"

ADMK | Anbumani | விரைவில்.. விரைவில்.. சட்டென்று அன்புமணி சொன்ன வார்த்தையால் பரபரப்பு