சினிமா

Diwakar | Watermelon | படப்பிடிப்பு தளத்தில் நடிகர் திவாகர் மீது தாக்குதல் என புகார்

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் திவாகர் மீது தாக்குதல் என புகார்

thanthitv

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் திவாகர் மீது தாக்குதல் என புகார்

தனியார் டிவி படப்பிடிப்பு தளத்தில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வாட்டர் மெலன் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் திவாகர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்... சென்னை, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள படப்பிடிப்பு தளத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் மற்றும் அசார் ஆகியோருக்கும் நடிகர் திவாகருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. இந்த மோதலில் தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் திவாகர் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தன்னைத் தாக்கியவர்கள் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்