Special Report | China | சோசியல் மீடியா பிரபலங்களை கதறவிடும் சீனாவின் புது சட்டம்...
சோசியல் மீடியா பிரபலங்களை கதறவிடும் புது சட்டம்... இனி வாய்க்கு வந்ததை பேச முடியாது - ரூ.12 லட்சம் அபராதம்
சீனாவுல அமலுக்கு வந்திருக்கும் புதிய சட்டம் அந்த நாட்டுல
இளம் தலைமுறையினரை குறிப்பா சமூக வலைதளங்களில பிரபலமாக இருக்க கூடிய இன்ஃபுளூயன்சர்ஸை- அதிர்ச்சியடைய வச்சிருக்கு. பொதுவா இன்ஃபுளூயன்சர்ஸ்-னா யாரு. சமூக வலைதளங்களில ரொம்பவே பிரபலமா இருப்பாங்க. பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப்-ல இவங்களுக்குனு லட்சக்கணக்குல
பின் தொடர்பவர்கள் இருப்பாங்க. குறிப்பிட்ட ஒரு பிரச்சினை பத்தியோ பொதுவான விஷயம் பத்ச்தியோ அவங்க பேசக்கூடியவை சரிதான் என்று மக்கள் நம்புவாங்க. உதாரணத்துக்கு மருத்துவம் பத்தியோ இல்ல அறிவியல் பத்தியோ சட்டம் பத்தியோ
நாட்டு நடப்பு சார்ந்து அவங்க எது வேண்டும்னாலும் பேசுவாங்க.
உதாரணத்துக்கு பணத்த இதல முதலீடு பண்ணிங்கனா நல்ல லாபம் கிடைக்கும்னு நிதி சார்ந்த ஆலோசனை சொல்லக்கூடிய ஒருத்தர நம்பி பலரும் அப்படியே செய்வாங்க. 100 நாள்ல உடல் எடையை குறைக்கலாம்னு... நா இப்படித்தான் பன்னேன், நீங்களும் இப்படி பன்னுங்கனு சொல்லி... day 1 -ல இத செஞ்சன். day 25-ல இப்படினு, நு வரிசையா வீடியோ போட்டுகிட்டே இருப்பாங்க. ஆனா
அந்த வீடியோவுல அவங்க சொன்னதை அப்படியே நம்பி செஞ்சி அதனால பாதிக்கப்பட்டவங்க நம்மூர்ல ரொம்பவே அதிகம். இந்த இன்புளூயன்சர்ஸ்-உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இருக்காங்க. இவங்களுக்குத்தான் இப்ப சீனா கடிவாளம் போட்டிருக்கு.