5 லிட்டர் நீரில் 6 மாதம் எரியும் அதிசய அடுப்பு...உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு
தண்ணீரில் எரியும் அதிசய அடுப்பு
வெறும் 5 லிட்டர் நீரில் 6 மாதம் எரியும்
உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு
உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் எரியும் அடுப்பினை கண்டுபிடித்து, தமிழர் ஒருவர் அசத்தி இருக்கிறார். இதன் சிறப்பம்சங்கள் பற்றி சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் விவரிக்க பார்க்கலாம்...
வணக்கம். பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்தி வளங்களுக்கு மாற்று கண்டுபிடிக்க கூடிய முயற்சியில உலகின் பல நாடுகள், தீவிரமாக ஈடுபட்டுக்கிட்டிருக்கு. குறிப்பா வளர்ந்த நாடுகள். இதுல சூரிய சக்திய மின்சாரமா மாற்றும் சோலார் பேனல்கள் தவிர வேற எதுவும் கடந்த 100 ஆண்டுகளில நடைமுறைக்கு சாத்தியமாகவில்ல. நிலைமை இப்படி இருக்க, இந்தியாவுல இருந்து குறிப்பா நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் எரியும் அடுப்ப கன்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தி இருக்காரு.